மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக இருந்த எரிக் ரேம்சே அக்குழுவிலிருந்து வெளியேறவுள்ளார்.
யுனைடெட்டின் முதல்நிலைக் குழுவின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய ரேம்சே, எம்எல்எஸ் எனும் அமெரிக்க காற்பந்து லீக்கில் போட்டியிடும் மினிசோட்டா யுனைடெட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இவ்வார இறுதியில் பிரிமியர் லீக்கில் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டியுடன் மோதவுள்ளது. அந்த ஆட்டத்திற்குப் பிறகு ரேம்சே மினிசோட்டாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்பார்.
32 வயது ரேம்சே, எம்எல்எசின் ஆக இளம் தலைமைப் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமைக்கு ஆளாகிறார்.