தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெருமூச்சு விட்ட வெஸ்ட் ஹேம்

1 mins read
2200cb1f-d6b2-407e-bb3e-fbca2c0f9fc2
கடந்த சில வாரங்களாக வெற்றிபெறாதிருந்த வெஸ்ட் ஹேமை மீட்டெடுத்தார் ஜேரட் போவன். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் பிரென்ட்ஃபர்டை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது வெஸ்ட் ஹேம் யுனைடெட்.

லீக்கில் கடந்த ஆறு ஆட்டங்களில் வெல்லாதிருந்த வெஸ்ட் ஹேம் ஒருவழியாக மீண்டு வந்தது. அதற்கு உறுதுணையாக இருந்தார் அக்குழுவின் நட்சத்திரம் ஜேரட் போவன்.

வெஸ்ட் ஹேமின் நான்கு கோல்களில் மூன்றைப் போட்டார் போவன். நான்காவது கோலைப் போட்டவர் எமர்சன்.

நீல் மோபே, யோவேன் விசா ஆகியோர் பிரென்ட்ஃபர்டுக்கு கோல் போட்டனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து வெஸ்ட் ஹேம் லீக் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு முன்னேறியது. வெஸ்ட் ஹேமும் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் பிரைட்டனும் தலா 39 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆறாவது இடத்தில் யுனைடெட், அவ்விரு குழுக்களையும்விட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்