தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20: 33 பந்தில் சதமடித்து நமீபிய வீரர் சாதனை

1 mins read
84b722d1-f5a7-4dc4-97f7-3c137503cb9f
22 வயது ஜேன் நிக்கோல் 36 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

கிர்திபூர், நேப்பாள்: நமீபியாவின் ஜேன் நிக்கோல் லோஃப்டீ ஏட்டன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கிர்திபூரில் நடந்த நேப்பாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஜேன் நிக்கோல் 33 பந்துகளில் சதமடித்தார். 22 வயது ஜேன் நிக்கோல் 36 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 8 சிக்சர்கள், 11 நான்குகள் அடங்கும்.

ஜேன் நிக்கோலின் அதிரடி சதத்தால் நமீபியா 207 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய நேப்பாளத்தால் 186 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதற்கு முன்னர் டி20-இல் நேப்பாளத்தின் கு‌‌‌ஷால் மாலா 34 பந்துகளில் சதமடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது ஜேன் நிக்கோல் தகர்த்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்