ரொனால்டோவுக்கு தடை, அபராதம்

ரொனால்டோவுக்கு தடை, அபராதம்

படம்: ராய்ட்டர்ஸ்

29 Feb 2024 - 4:17 pm

1 mins read

ரியாத்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு சவூதி லீக் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரொனால்டோவின் அல்நசர் அணியும் அல் ‌‌‌ஷாபாப் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த அந்த ஆட்டத்தில் அல்நசர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிந்த பிறகு ரொனால்டோ ரசிகர்களைப் பார்த்து தகாத முறையில் கை அசைத்துள்ளார். அது தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பரவியது. பின்னர் அது பெரும் சர்ச்சையாக மாறியது.

ரொனால்டோவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதாக சவூதி அரேபிய காற்பந்து சங்கம் தெரிவித்தது.

மேலும், ரொனால்டோ காற்பந்து சங்கத்திற்கு 10,000 சவூதி ரியால் (3,600 வெள்ளி), அல் ‌‌‌ஷாபாப் அணிக்கு 20,000 சவூதி ரியால் அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரொனால்டோ இந்த முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி இல்லை.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துரொனால்டோ

தொடர்புடைய செய்திகள்