தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்ஏ கிண்ணம்: காலிறுதிக்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட்

1 mins read
76a2a7da-5116-40f2-9624-dbb0779bd67e
ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் கோல் அடித்த கசிமரோ. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் புதன்கிழமை பின்னிரவு நடந்த எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் குழுவை எதிர்த்து விளையாடியது.

அந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் கசிமரோ யுனைடெட்டிற்கு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

காயத்தில் இருந்து மீண்டு வந்த தற்காப்பு ஆட்டக்காரர் ரஃபேல் வரான் 90 நிமிடங்கள் சிறப்பாக விளையாடியதை பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக் பாராட்டினார்.

எதிரணி வீரர்கள் புரூனோ ஃபெர்னாண்டசை குறிவைத்து தாக்குதல் ஆட்டம் நடத்தினர். இருப்பினும் ஃபெர்னாண்டஸ் தமது திறமையான ஆட்டத்தால் அவர்களை சமாளித்தார் என்று டென் ஹாக் புகழ்ந்தார்.

எஃப்ஏ கிண்ணத்தின் காலிறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு லிவர்பூல் அணியுடன் மோதவுள்ளது. அந்த ஆட்டம் மார்ச் 16ஆம் தேதி நடக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்