தவிக்கும் யுனைடெட்; தகிக்கும் சிட்டி

மான்செஸ்டர்: கொடிகட்டிப் பறந்து வரும் மான்செஸ்டர் சிட்டியும் வென்றால் போதும் என்ற நிலையில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டும் ஞாயிற்றுக்கிழமையன்று (3 மார்ச்) மோதவிருக்கின்றன.

நிர்வாகி எரிக் டென் ஹாக்கின்கீழ் யுனைடெட், சிட்டியுடன் மோதிய கடந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. அப்படியிருக்கையில் இந்த ஆட்டத்தில் சிட்டி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பது பரவலான கருத்து.

சென்ற பருவம் பிரிமியர் லீக் விருது, எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆக மூன்றையும் வென்ற அக்குழு, இப்பருவமும் அவற்றைக் கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளது.

எனினும், யுனைடெட் தங்களால் முடிந்தவரை மிகச் சிறப்பாக விளையாடும் என்று தான் கருதுவதாகக் கூறியுள்ளார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.

“யுனைடெட்டிடமிருந்து சிறப்பான விளையாட்டை நான் எதிர்பார்க்கிறேன். அது நான் மிகவும் மதிக்கும் குழுவாகும்,” என்றார் கார்டியோலா.

இப்பருவம் யுனைடெட் பெரிதும் சிரமப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் அக்குழு அச்சுறுத்தும் வகையில் விளையாடக்கூடியது என்று கார்டியோலா சொன்னார்.

“கார்னர் கிக், ஃப்ரீ கிக், பெனால்டி வாய்ப்புகள் கிடைக்கும்போதும் ஆட்டத்தின் போக்கை மாற்றும்போதும் சாதாரணமாக விளையாடும்போதும் அவர்களிடம் தனிச்சிறப்பு தென்படும். அக்குழுவின் சில விளையாட்டாளர்களிடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதால் அவர்கள் கோல்களைப் போடுகின்றனர்,” என்று யுனைடெட்டை கார்டியோலா பாராட்டிப் பேசினார்.

இந்த ஆட்டத்தை முன்னிட்டு பல முக்கியமான விளையாட்டாளர்கள் காயமுற்றிருப்பதால் தவித்துக்கொண்டிருக்கிறது யுனைடெட். காயமுற்ற அதன் வீரர்களில் கடந்த சில வாரங்களாக அபாரமாக விளையாடிவந்த தாக்குதல் ஆட்டக்காரர் ராஸ்முஸ் ஹோய்லண்டும் ஒருவர்.

வெற்றிடத்தை நிரப்ப அக்குழுவின் இளம் வீரர் கேப்ரியேல் பியாங்கெரியை நாடக்கூடும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பியாங்கெரி இதுவரை யுனைடெட்டின் முதல்நிலை குழுவுடன் களமிறங்கியதில்லை.

சிட்டிக்கு எதிரான ஆட்டத்தை முன்னிட்டு யுனைடெட்டின் முதல்நிலை விளையாட்டாளர்கள் ஈடுபட்ட பயிற்சியில் பியாங்கெரி காணப்பட்டார். எனினும், மூத்த வீரர்களுக்கான பயிற்சிகளில் போதுமானோர் இல்லாவிட்டால் இளம் விளையாட்டாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

18 வயதுக்கு உட்பட்ட விளையாட்டாளர்களுக்கான யுனைடெட் குழு விளையாடிய கடந்த 13 ஆட்டங்களில் பியாங்கெரி ஐந்து கோல்களைப் போட்டதுடன் மூன்று கோல்களை உருவாக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!