2034 உலகக் கிண்ணம்: சவூதிக்குப் போட்டியில்லை

2034 உலகக் கிண்ணம்: சவூதிக்குப் போட்டியில்லை

1 mins read
150a3a22-a738-47d2-bb23-ef7a7f000c0c
2034 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்த சவூதி அரேபியா விண்ணப்பித்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ரியாத்: சவூதி அரேபியா, 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்த அதிகாரபூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

சவூதி அப்போட்டியை ஏற்று நடத்துவது கிட்டத்தட்ட உறுதி. வேறு எந்த நாடும் 2034 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்த முன்வராததே அதற்குக் காரணம்.

அதனைத் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் இரண்டாவது மத்திய கிழக்கு நாடாக சவூதி அரேபியா விளங்கவுள்ளது. 2022ஆம் ஆண்டுப் போட்டியை கத்தார் ஏற்று நடத்தியது.

குறிப்புச் சொற்கள்