தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியா வெற்றி: லயன், கிரீன் அபாரம்

1 mins read
381838ce-16e9-4df8-883f-c9860b74f159
முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களை எடுத்து அசத்திய ஆஸ்திரேலியாவின் கேமரன் கிரீன். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

முதல் இன்னிங்சில் 383 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 164 ஓட்டங்களையும் ஆஸ்திரேலியா எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 179 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 196 ஓட்டங்களையும் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் உறுதுணையாக இருந்தார். இப்போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் லயன்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்தடிப்பாளர் கேமரன் கிரீனின் அபார ஆட்டமும் பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 174 ஓட்டங்களைக் குவித்தார் கிரீன்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, டிரான்ஸ்-டாஸ்மன் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்வது உறுதியானது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே வியாழக்கிழமை (மார்ச் 8) நடைபெறவுள்ள இரண்டாம் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றாலும் அக்கிண்ணம் ஆஸ்திரேலியாவின் வசம் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்