தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றியைக் கவ்விக்கொண்ட லிவர்பூல்

1 mins read
e3c701cb-a0af-4d35-9e6f-9d43f55044c0
நாட்டிங்கம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலைப் போட்ட லிவர்பூலின் டார்வின் நூன்யெஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

நாட்டிங்கம்: நாட்டிங்கம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூல் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடியும் என்ற நிலை இருந்தபோது கடைசி இரண்டு நிமிடங்களில் கோல் போட்டு லிவர்பூலை வெல்லச் செய்தார் டார்வின் நூன்யெஸ். நிர்வாகி யர்கன் கிளோப்புக்குக்கீழ் லிவர்பூல், பிரிமியர் லீக்கில் 18 முறை ஆட்டங்களில் 90வது நிமிடத்துக்குப் பிறகு வெற்றி கோலைப் போட்டிருக்கிறது.

மற்ற லீக் ஆட்டங்களில் கிரிஸ்டல் பேலசை 3-1 எனும் கோல் கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வென்றது, லூட்டன் டவுனை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது ஆஸ்டன் வில்லா. லூட்டன் விட்டுக்கொடுக்காமல் விளையாடியபோதும் வில்லா ஒருவழியாக வெற்றிபெற்றது.

லீக் பட்டத்திற்கான போட்டியில் ஈடுபட்டுள்ள ஆர்சனல், சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அதிகாலை நான்கு மணிக்கு ‌ஷெஃபீல்ட் யுனைடெட்டைச் சந்திக்கிறது.

குறிப்புச் சொற்கள்