தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐசிசி அனைத்துலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

1 mins read
42dd30a6-3431-4f35-ae1b-4fa9081a94be
நியூசிலாந்து அணியின் தோல்வி இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்தது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி அனைத்துலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. அதனால் அனைத்துலக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகித்த நியூசிலாந்து இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்தியா 64.58 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. நியூசிலாந்து 60 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 59.09 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

வியாழக்கிழமையன்று (மார்ச் 7) தொடங்கும் இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் ஆஸ்திரேலியா தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறும்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அப்போட்டி இந்தியாவின் தர்மசாலா நகரில் நடைபெறும்.

ஆஸ்திரேலியா - நியூளசிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை (மார்ச் 8) தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்