ஷெஃபீல்ட் யுனைடெட்டைப் பந்தாடிய ஆர்சனல்

1 mins read
422ede9d-fe0a-4e85-ad39-0731c122ffd0
ஷெஃபீல்ட் யுனைடெட் குழுவுக்கு எதிராக கோல் மழை பொழிந்த ஆர்சனல். - படம்: ஏஎஃப்பி

ஷெஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 6-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் மார்ச் 4ஆம் தேதியன்று வீழ்த்தியது.

முற்பாதி ஆட்டத்தில் ஆர்சனல் ஐந்து கோல்களைப் போட்டு எதிரணியைத் திணறடித்தது.

இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் லிவர்பூலை ஆர்சனல் நெருங்கியுள்ளது.

லிவர்பூலைவிட அது இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

27 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள நிலையில், 61 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆர்சனல் உள்ளது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனலைவிட ஒரு புள்ளி அதிகமாகப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்