தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடிக்க காத்திருக்கும் இந்தியா

1 mins read
638282f9-ccb2-4f07-b7d0-a58887928121
இளம் வீரர்களைக் கொண்டு அணித் தலைவர் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் ஆட்டம் கொண்ட தொடரின் இறுதியாட்டம் வியாழக்கிழமை (பிப்ரவரி 7) தர்மசாலாவில் தொடங்குகிறது.

இந்திய அணி ஏற்கெனவே தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்க இந்தியா காத்திருக்கிறது.

தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து அடுத்தடுத்து மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது. அதனால் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தர்மசாலாவில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இங்கிலாந்துக்கு அது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் சுழற்பந்து வீச்சில் அசத்திய இந்திய அணிக்கு தர்மசாலா ஆடுகளம் சவால் விடக்கூடும்.

இந்த ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினால் அது அவருக்கு 100வது ஆட்டமாகும்.

விராத் கோஹ்லி, கே எல் ராகுல், முகம்மது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்களைக் கொண்டு அணித் தலைவர் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்