தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்தியா - நியூசிலாந்து ஜூலை 27ல் மோதல்

1 mins read
e03c46e4-938d-424e-953e-4cfac577a513
கோப்புப் படம்: - இநதிய ஊடகம்

லாசன்னே: ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் நியூசிலாந்து, அர்ஜெண்டினா, அயர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 27ஆம் தேதி நியூசிலாந்துடன் மோதுகிறது. தொடர்ந்து 29ம் தேதி அர்ஜெண்டினாவுடனும், 30ஆம் தேதி அயர்லாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதன் பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி பெல்ஜியத்தையும், 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது இந்திய அணி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்