ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெறத் தவறிய பெண்கள் மேசைப் பந்து அணி

ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெறத் தவறிய பெண்கள் மேசைப் பந்து அணி

1 mins read
e001d4e6-174f-4c34-87ef-5b83d44ce1f5
தரவரிசையிலும் சிங்கப்பூர் பெண்கள் மேசைப் பந்து அணி சரிவைச் சந்தித்துள்ளது. 10வது இடத்தில் இருந்து அது 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பெண்கள் மேசைப் பந்து அணி முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறத் தவறிவிட்டது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 ஒலிம்பிக் போட்டியில் மேசைப் பந்து அறிமுகம் கண்டது. அதிலிருந்து தொடர்ந்து நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் பெண்கள் மேசைப் பந்து அணி பங்குபெற்று வந்தது.

போதிய அனுபவம் இல்லாதது தான் தகுதி பெறாததற்குக் காரணம் என்று சிங்கப்பூர் மேசைப் பந்து சங்கத்தின் போ லி சான் தெரிவித்தார்.

மேலும் தரவரிசையிலும் சிங்கப்பூர் பெண்கள் மேசைப் பந்து அணி சரிவைச் சந்தித்துள்ளது. 10வது இடத்தில் இருந்து அது 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற தரவரிசை முக்கியம். ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தரவரிசையில் 11 முதல் 14 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

குறிப்புச் சொற்கள்