தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சதம் விளாசிய ரோகித், கில்

1 mins read
1f3df686-00b8-4790-bb34-a45e001f387d
இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த ரோகித்- கில் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது. - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

ஆட்டத்தின் இரண்டாம் நாளில் (மார்ச் 8) இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா (103), ‌ஷுப்மன் கில் (110) இணை சதம் விளாசினர்.

இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த ரோகித்- கில் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளியின் போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழந்து 315 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மேலும் அது 97 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 218 ஓட்டங்களுக்கு சுருட்டினர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

குறிப்புச் சொற்கள்