தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்து இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி

1 mins read
82557460-952b-4bd0-a6fb-0332a00e9aa6
படம்: - இந்திய ஊடகம்

பர்மிங்ஹாம்: அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 26ஆம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் இவோன் லியுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிந்து 21-10 என கைப்பற்றினார்.

2வது செட் தொடங்க இருந்த நிலையில் காயம் காரணமாக இவோன் லி விலகினார். இதனால் சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கொரியாவின் அன் சே யங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார் சிந்து.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 24-14, 13-21, 13-213 என்ற ஆட்டக்கணக்கில் கொரியாவின் சு லி யங்கிடம் தோல்வி அடைந்தார்.

குறிப்புச் சொற்கள்