தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐசிசி தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

1 mins read
b9c81a40-1edb-48df-9bfa-e9e5abb84606
ஹிமாலசப் பிரதேசத்தில் தர்மசாலா அரங்கில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன். - படம்: ராய்ட்டர்ஸ்

இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை (மார்ச் 13) தனது 100வது டெஸ்ட் போட்டியை ஒன்பது விக்கெட்டுகளுடன் முடித்து, ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் தமிழகத்தைச் சேர்ந்த ரவி அஸ்வின். இந்தப் போட்டியில் (4+5) 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இந்தியாவில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள அஸ்வின், உலக அளவில் ஆர்ஜெ ஆர்ட்லியுடன், 36 மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

முதலிடத்தில் முரளிதரன், 67, இரண்டாம் இடத்தில் ஷேன் வார்னே, 37 இருக்கிறார்கள். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் அஸ்வின் வார்னேவின் இடத்தினைப் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 13வது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐசிசி பௌலிங் டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்டும் மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்