தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விராத் கோஹ்லி இல்லாமல் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்லாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர்

1 mins read
c4684db9-a220-4029-9f3d-174f44538fe3
விராத் கோஹ்லி. - படம்: இந்திய ஊடகம்

விராத் கோஹ்லி இல்லாமல் இந்திய அணியால் சிறப்பான டி20 அணியை உருவாக்க முடியாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார்.

விராத் கோஹ்லி இல்லாமல் இந்திய அணி டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான இர்பான் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அமெரிக்காவும் வெஸ்ட் இண்டீசும் இணைந்து டி20 உலகக் கிண்ணப் போட்டியை ஜூன் மாதம் நடத்தவிருக்கின்றன. இந்த உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் விராத் கோஹ்லி இடம்பெற வாய்ப்பு இல்லை என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவித்தன.

விராத் கோஹ்லி இடம்பெறுவது இப்போதுவரை சந்தேகத்தில் இருப்பதாகவே அனைத்து தரப்பிலிருந்தும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்