பெலிங்ஹமைப் புகழ்ந்து தள்ளும் பெப் கார்டியோலா

பெலிங்ஹமைப் புகழ்ந்து தள்ளும் பெப் கார்டியோலா

1 mins read
93cde7c7-2493-40e0-a1f7-1e9d3ccc55af
சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச்சுற்றில் மான்செஸ்டர் சிட்டியுடன் ஜூட் பெலிங்ஹமின் ரியால் மட்ரிட் மோதுகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, ரியால் மட்ரிட் அணி வீரர் ஜூட் பெலிங்ஹமைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

“கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்று பலம் வாய்ந்த அணியாக ரியால் மட்ரிட் திகழ்கிறது. அதற்கு முக்கியக் காரணம் ஜூட் பெலிங்ஹம்தான். அவரது வருகையால் ரியால் மட்ரிட்டின் வெற்றிகள் அதிகரித்துள்ளன,” என்று கார்டியோலா குறிப்பிட்டார்.

இம்முறை சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றில் மான்செஸ்டர் சிட்டியுடன் ரியால் மட்ரிட் மோதுகிறது. காலிறுதிச்சுற்றின் முதல் ஆட்டம் ஏப்ரல் 10ஆம் தேதியும் இரண்டாம் ஆட்டம் ஏப்ரல் 18ஆம் தேதியும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் ரியால் மட்ரிட்டை வீழ்த்தி சிட்டி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

குறிப்புச் சொற்கள்