‘இந்திய கிரிக்கெட் அணியைப் பாகிஸ்தானில் விளையாட கட்டாயப்படுத்த முடியாது’

‘இந்திய கிரிக்கெட் அணியைப் பாகிஸ்தானில் விளையாட கட்டாயப்படுத்த முடியாது’

1 mins read
7ea5ebc0-c901-41f1-a417-b51545479d95
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற போது, இந்தியாவுக்கான ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) வலியுறுத்த முடியாது என அனைத்துலக கிரிக்கெட் மன்றம்(ஐசிசி) தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ‘சாம்பியன்ஸ் டிராபி’ நடக்கவிருக்கிறது. அரசியல், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட்டை இந்தியா தவிர்த்து வருகிறது.

“சாம்பியன்ஸ் டிராபி’ போட்டிக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை பிசிசிஐ, இந்திய அரசு தான் முடிவு செய்யும். அரசியல் சார்ந்த நடவடிக்கையில் மன்றம் தலையிடாது,” என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற போது, இந்தியாவுக்கான ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்