தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்ஏ கிண்ணம்: வெற்றியைக் கவ்விய யுனைடெட்

1 mins read
38243a49-97d0-4011-85e2-b4eb1938fe95
லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலைப் போடும் யுனைடெட்டின் டியாலோ (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் விறுவிறுப்பான காலிறுதியாட்டத்தில் தனது பரம வைரியான லிவர்பூலை 4-3 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.

90 நிமிடங்கள் நிறைவுற்ற நிலையில் ஆட்டத்தின் கோல் எண்ணிக்கை 2-2 என இருந்தது. வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

கூடுதல் நேரம் முடிவடையவிருந்தபோது கோல் எண்ணிக்கை 3-3 என இருந்தது. அப்போது அமாட் டியோலா வெற்றி கோலைப் போட்டு யுனைடெட்டை வெல்லச் செய்தார்.

இந்த ஆட்டத்தில் இருமுறை தோல்வியின் விளிம்பிற்குச் சென்ற யுனைடெட், விட்டுக்கொடுக்காமல் விளையாடி வெற்றியைப் பறித்துக்கொண்டது.

முதலில் 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் லிவர்பூல் முன்னணி வகித்தது. 87வது நிமிடத்தில் யுனைடெட்டின் ஆன்டனி, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர் 105வது நிமிடத்தில் ஹார்வி எலியட் மீண்டும் லிவர்பூலை முன்னுக்கு அனுப்பினார். 112வது நிமிடத்தில் யுனைடெட்டின் மார்க்கஸ் ரே‌ஷ்ஃபர்ட். மீண்டும் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் டியாலோ.

ஸ்காட் மெக்டோமினே யுனைடெட்டின் முதல் கோலைப் போட்டார். அலெக்சிஸ் மெக்காலிஸ்டர், முகம்மது சாலா ஆகியோர் லிவர்பூலின் முதல் இரண்டு கோல்களைப் போட்டனர்.

மற்றோர் எஃப்ஏ கிண்ணக் காலிறுதியாட்டத்தில் லெஸ்டர் சிட்டியை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது செல்சி.

குறிப்புச் சொற்கள்