2024 ஒலிம்பிக் போட்டிக்கு உதவும் 45,000 தொண்டூழியர்கள்

2024 ஒலிம்பிக் போட்டிக்கு உதவும் 45,000 தொண்டூழியர்கள்

1 mins read
e6c12082-b82a-463d-b06a-1acaf769718c
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: இவ்வாண்டு பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் போட்டியை சிறப்பாக நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் கிட்டத்தட்ட 45,000 தொண்டூழியர்களின் உதவிகளைப் பெறவுள்ளனர்.30,000 பேர் ஒலிம்பிக் போட்டிக்கும் 15,000 பேர் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கும் உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டூழியர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். தொண்டூழியராக சேவையாற்ற உலக அளவில் கிட்டத்தட்ட 300,000 பேர் விண்ணப்பித்தனர்.

தற்போது தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு தொண்டூழியர்களின் பின்னணிகளை சோதித்துக் கொண்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

2012ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட 70,000 தொண்டூழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு முன்னர் 2020 தோக்கியோ போட்டிக்கு கிட்டத்தட்ட 110,000 தொண்டூழியர்கள் பணியமர்த்தப்பட திட்டமிடப்பட்டது. 

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தேவையான அளவில் தான் தொண்டூழியர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொண்டூழியருக்கும் உள்ள பணிகளைத் தெளிவாகத் திட்டமிட்டுள்ளோம் என்று ஏற்பாட்டுக் குழு கூறியது.

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் வித்தியாசமான தேவைகள் இருக்கும். அதற்கு ஏற்றவாறுதான் தொண்டூழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று ஏற்பாட்டுக் குழு கூறியது.

குறிப்புச் சொற்கள்