தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: மும்பை - குஜராத் பலப்பரிட்சை

1 mins read
e8fe3447-bca7-48f2-8d4a-551cf0ca6491
கடந்த இரண்டு பருவங்களாக குஜராத் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை அணியை வழிநடத்துகிறார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் ஆட்டமும் ஒன்று. சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு நடக்கிறது.

கடந்த இரண்டு பருவங்களாக குஜராத் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ஹார்திக் பாண்டியா தற்போது மும்பை அணியை வழிநடத்துகிறார். மும்பை அணியில் ரோகித் சர்மா, இ‌‌ஷன் கி‌‌‌‌‌ஷான், ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ் என நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.

முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் அணித்தலைவராக களமிறங்கும் ‌ஷுப்மன் கில்லுக்கு மும்பை பெரும் நெருக்கடி கொடுக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். காயம் காரணமாக முகம்மது ‌‌ஷமி இம்முறை குஜராத் அணிக்கு விளையாடவில்லை. 

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

குறிப்புச் சொற்கள்