தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: வரலாறு காணாத அளவில் ஓட்டங்களைக் குவித்த ஐதராபாத்

1 mins read
6c677239-ec5b-4555-876d-2452576345cf
மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பந்தடிக்கும் ஐதராபாத்தின் ஹைன்ரிக் கிளாசன். - படம்: ஏஎஃப்பி

ஐதராபாத்: இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் லீக்கின் ஓர் ஆட்டத்தில் இதுவரை காணாத அளவில் ஓட்டங்களைக் குவித்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஐதராபாத் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது. மேலும், ஐபிஎல்லில் இதுவரை காணப்படாத வகையில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றிபெற்றது.

முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் ஓர் ஐபிஎல் ஆட்டத்தில் ஆக அதிக ஓட்டங்களை எடுத்திருந்தது. 2013ல் அந்த அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ஓட்டங்களை எடுத்தது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பந்தடிக்கக் களமிறங்கிய ஐதராபாத்தின் டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார். பின்னர் அபி‌ஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்தார்.

ஹைன்ரிக் கிளாசன் ஆட்டம் இழக்காமல் 34 பந்துகளில் 80 ஓட்டங்களைக் குவித்தார்.

குறிப்புச் சொற்கள்