தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைசிக் கட்டத்தில் ஓட்டங்களை வாரிவழங்கிவிட்டோம்: ரிஷப் பன்ட்

1 mins read
916363e6-ac38-46a1-acd7-a61bac44e161
“நோர்க்கியாவை கடைசிக் கட்டத்தில் பந்துவீச வைக்க விரும்பினோம். ஆனால், அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை,” என்றார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணித்தலைவர் ரிஷப் பன்ட். - படம்: இந்திய ஊடகம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (மார்ச் 28) ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பந்தடித்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ஓட்டங்கள் எடுத்தது. ரியான் பராக் 45 பந்தில் 85 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை வீசிய ஆவேஷ்கான் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ராஜஸ்தான் அணி 2வது வெற்றியை பெற்றது. டெல்லி அணி 2வது தோல்வியைச் சந்தித்தது.

தோல்வி குறித்து கருத்துரைத்த டெல்லி அணித்தலைவர் ரிஷப் பன்ட், “இந்தத் தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது. 16 ஓவர்கள்வரை பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், கடைசிக் கட்டத்தில் நிறைய ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விட்டோம். ராஜஸ்தான் பந்தடிப்பாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

“அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். பந்தடிப்பில் வார்னர்-மிட்செல் மார்ஷ் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அதை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம்.

நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீசலாம் என விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை,” என்று கூறினார்.

நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் ரியான் பராக் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 25 ஓட்டங்கள் எடுத்தார்.

குறிப்புச் சொற்கள்