தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவனத்தை சிதறவிட்ட யுனைடெட்

1 mins read
069188ff-a36a-4893-b38f-12b03ab029c0
மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் பிரென்ட்ஃபர்டின் கிறிஸ்டஃபர் அயர் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லிக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் பிரென்ட்ஃபர்டும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இந்த ஆட்டம் நிறைவடையவிருந்த வேளையில் மேசன் மவுன்ட் யுனைடெட்டை முன்னுக்கு அனுப்பினார். அக்குழுவுக்கு வெற்றி உறுதி என எதிரபார்க்கப்பட்ட நிலையில் பிரென்ட்ஃபர்டின் கிறிஸ்டஃபர் ஆயர் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

ஆட்டத்தில் பிரென்ட்ஃபர்ட்தான் சிறப்பாக விளையாடியது என்று தான் ஒப்புக்கொள்வதாக யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் கூறினார்.

சனிக்கிழமை (மார்ச் 30) நடைபெற்ற மற்ற பிரிமியர் லீக் ஆட்டங்களில் உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஆஸ்டன் வில்லா, பர்ன்லியும் செல்சியும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

குறிப்புச் சொற்கள்