ரிஷப் பன்டுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்

1 mins read
7094f73b-db1a-4179-9043-b2a7525ce353
குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை முடிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 191 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 192 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களம் இறங்கியது. ஆனால் 7 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணியால் 171 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியின் கேப்டனான ரிஷப் பன்டுக்கு ஐபிஎல் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் கடைசி 2 ஓவரின்போது 30 யார்டு வட்டத்திற்கு வெளியே நான்கு வீரர்கள் மட்டுமே களக்காப்பு செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்