ஐபிஎல் 2024இல் ஆக வேகமாக பந்துவீசிய ஜெரால்ட்

மும்பை: இந்தியாவில் தற்போது ஐபிஎல் 20 ஓவர் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

இந்தப் பருவம் முதல் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீச பந்துவீச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனால் இளம் பந்துவீச்சாளர்கள் தங்களது வேகத்தால் பந்தடிப்பாளர்களைத் தடுமாறச் செய்கிறார்கள்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

15.3ஆவது ஓவரில் ராஜஸ்தான் பந்தடிக்கும் போது மும்பையின் ஜெரால்ட் கோட்சியா மணிக்கு 157.4 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார்.

அதன்மூலம் 2024 ஐபிஎல் தொடரில் ஆக வேகமாகப் பந்துவீசியவர் என்ற சாதனையை தன்வசப்படுத்திக் கொண்டார் தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட்.

இதற்கு முன்னர் அந்த சாதனையை இந்தியாவின் மயான்க் யாதவ் படைத்தார்.

லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு விளையாடும் மயான்க் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மணிக்கு 155.8 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார்.

ஐபிஎல் வரலாற்றில் ஆக வேகமாகப் பந்து வீசியவர் ஆஸ்திரேலியாவின் ‌‌‌ஷான் டையிட். 2011ஆம் ஆண்டு அவர் மணிக்கு 157.71 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!