தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லீக் விருதுக்கான போட்டி: ஆர்சனல், சிட்டி தீவிரம்

1 mins read
f68c91cc-b075-4a6b-af4a-6d6f4175a50f
லூட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் மார்ட்டின் ஓடகார்ட் (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லூட்டன் டவுனை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

மார்ட்டின் ஓடகார்ட் ஆர்சனலின் முதல் கோலைப் போட்டார். லூட்டனின் டாய்க்கி ஹ‌ஷியோக்கா சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் இரண்டாவது கோலும் விழுந்தது.

இந்த ஆட்டத்தில் சில முக்கிய விளையாட்டாளர்களை ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா விளையாடவில்லை. மாற்று ஆட்டக்காரர்களின் முயற்சியைப் பாராட்டினார் அர்ட்டெட்டா.

மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி.

சிட்டிக்கு மூன்று கோல்களைப் போட்டு அசத்தினார் ஃபில் ஃபோடன். அக்குழுவின் மற்றொரு கோலைப் போட்டார் ரொட்ரி.

பிரிமியர் லீக் விருதுக்கான போட்டியில் இறங்கியுள்ள சிட்டியும் ஆர்சனலும் கடந்த வார இறுதியில் மோதின. அந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

குறிப்புச் சொற்கள்