தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் முதலிடத்தில் லிவர்பூல்

1 mins read
4c8358d1-5eb4-42a8-8a01-2a1b1340c950
தங்கள் குழுவின் மூன்றாவது கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் லிவர்பூல் வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் லிவர்பூல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

‌ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல்.

பிரிமியர் லீக் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ‌ஷெஃபீல்ட் யுனைடெட் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது. எனினும் ஒருவழியாக வென்றது லிவர்பூல்.

ஆட்டத்தின் 76வது நிமிடம் வரை கோல் எண்ணிக்கை 1-1 என சமநிலையில் இருந்தது. பின்னர் அலெக்சிஸ் மெக்காலிஸ்டர், கொடி காக்போ இருவரும் கோல் போட்டு லிவர்பூலை வெல்லச் செய்தனர்.

லிவர்பூலின் முதல் கோலைப் போட்டார் டார்வின் நுனியெஸ்.

லிவர்பூலின் கொனர் பிராட்லி சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் ‌ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு கோல் விழுந்தது.

குறிப்புச் சொற்கள்