தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் 2024: முதல் வெற்றியை எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸ்

1 mins read
b1bc2c02-8e26-4146-9fa2-1742ac8c3080
மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹார்திக் பாண்டியா (வலது), ராஜஸ்தான் ராயல்சின் ரியான் பராக்குடன் கைகுலுக்குகிறார். - படம்: ஏஎஃப்பி

மும்பை: மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டி மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் பருவத்தில் மும்பை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

இதேபோன்று டெல்லி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இதுவரை இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் மும்பை அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்