தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: எட்டாவது சதம், 7,500 ஓட்டங்கள் எடுத்து கோஹ்லி சாதனை

1 mins read
3f7f7ace-f798-4fc4-9d09-2ede5cc22a98
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பந்தடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராத் கோஹ்லி.

ஐபிஎல் போட்டியில் இது அவரது எட்டாவது சதமாகும். ஐபிஎல் தொடரில் அதிக சதமடித்தோர் பட்டியலில் ஏற்கெனவே முதலிடம் வகிக்கும் கோஹ்லி, நடப்பு பருவத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வென்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒட்டுமொத்தமாக, டி20 கிரிக்கெட்டில் இது கோஹ்லியின் ஒன்பதாவது சதமாகும். 2022 ஆசியக் கிண்ண டி20 அனைத்துலகப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் சதமடித்து இருந்தார்.

ஐபிஎல் போட்டியில் 7,500 ஓட்டங்களை எடுத்துள்ள முதல் வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்