மிரட்டல் விடுக்கும் ஆர்சனல்

1 mins read
db360cba-2505-4e8f-ad5b-cf45d35a57ce
ஆர்சனலின் மூன்றாவது கோலைப் போட்ட பிறகு தனது குழுவினருடன் கொண்டாடும் லியாண்ட்ரோ ட்ரொசார்ட் (இடது). - படம்: இபிஏ

பிரைட்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் சற்றும் சளைக்காமல் தொடர்ந்து வீரியத்துடன் விளையாடி வருகிறது ஆர்சனல்.

சனிக்கிழமை (ஏப்ரல் 6) நள்ளிரவுக்குப் பிறகு நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டனை 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. புக்காயோ சாக்கா, கய் ஹாவர்ட்ஸ், லியாண்ட்ரோ ட்ரொசார்ட் ஆகியோர் ஆர்சனலின் கோல்களைப் போட்டனர்.

இப்பருவத்தில் லிவர்பூல், லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி ஆகிய இரு குழுக்களும் லீக் விருதுக்கான போட்டியில் இறங்கியுள்ளன. அவற்றுக்குத் தாங்கள் சளைத்த குழு அல்ல என்பதை அடிக்கடி நினைவூட்டி வருகிறது ஆர்சனல்.

பேலசுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போட்ட பிறகு கொண்டாடும் சிட்டி வீரர்கள்.
பேலசுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போட்ட பிறகு கொண்டாடும் சிட்டி வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சிட்டி, கிறிஸ்டல் பேலசை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது. அந்த ஆடட்த்தில் சிட்டியின் கெவின் டி பிரய்ன இரண்டு கோல்களைப் போட்டார்.

பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான ஆட்டத்தில் வில்லாவின் மூன்றாவது கோலைப் போடும் ஒலி வாட்கின்ஸ் (இடமிருந்து இரண்டாவது).
பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான ஆட்டத்தில் வில்லாவின் மூன்றாவது கோலைப் போடும் ஒலி வாட்கின்ஸ் (இடமிருந்து இரண்டாவது). - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்டன் வில்லாவும் பிரென்ட்ஃபர்டும் மோதிய விறுவிறுப்பான ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

குறிப்புச் சொற்கள்