தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிவர்பூலை மீட்ட சாலா

1 mins read
40bcbb70-eef4-44da-9fe8-691a7fae0a71
யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கும் லிவர்பூலின் முகம்மது சாலா (வலது). - படம்: இபிஏ

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூலை மீட்டார் அதன் நட்சத்திரம் முகம்மது சாலா.

தனது பரம வைரிகளுக்கு எதிராக 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் எதிர்பாரா விதமாகத் தோற்றுக்கொண்டிருந்தது. 84வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி தனது குழுவை சமநிலை காண வைத்தார் சாலா. இறுதி கோல் எண்ணிக்கை 2-2.

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் லூயிஸ் டியாஸ் லிவர்பூலை முன்னுக்கு அனுப்பினார். முற்பாதியாட்டத்தில் அறவே சோபிக்காத யுனைடெட் மேலும் பல கோல்களை விட்டுக்கொடுக்காமல் தப்பித்தது.

ஆனால் பிற்பாதியாட்டத்தில் புருனோ ஃபெர்னாண்டஸ், கொபி மெய்னூ ஆகியோரின் அபாரமான கோல்களின் மூலம் யுனைடெட் முன்னுக்குச் சென்றது. லிவர்பூல் ஒருவழியாகப் பிழைத்துக்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) நடைபெற்ற இதர பிரிமியர் லீக் ஆட்டங்களில் நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர்; செல்சியும் ‌ஷெஃபீல்ட் யுனைடெட்டும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

குறிப்புச் சொற்கள்