ஐஃபில் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள்

ஐஃபில் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள்

1 mins read
0829f40c-b312-4127-a400-f4854750ff77
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.  - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் தயாராகி வருகிறது.

இந்நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் ஐபல் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் தீப்பந்தம் பாரிஸ் நோக்கிச் செல்லும், அதன் பின்னர் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்படும் பணிகள் தொடங்கும்.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் ஐஃபில் கோபுரம் முக்கிய அங்கம் வகிக்கிறது. 32 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டம் முடியும் இடமாக கோபுரம் உள்ளது, மேலும் கடற்கரை கைப்பந்து விளையாடும் திடல் கோபுரத்திற்குக் கீழ் உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்