தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோப்பா லீக்: கதிகலங்கிப் போன லிவர்பூல்

1 mins read
a2225baa-3f2c-4996-a243-5f952b243712
லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் தனது குழுவின் அபார வெற்றியைக் கொண்டாடும் அட்டலான்டா நிர்வாகி ஜியான் பியெரோ கஸ்பரினி (முன்னால்). - படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூலை 3-0 எனும் கோல் கணக்கில் வென்று அசத்தியது இத்தாலியின் அட்டலான்டா.

இந்தக் காலிறுதிச் சுற்று ஆட்டம் லிவர்பூலின் சொந்த மண்ணான ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த 14 மாதங்களில் முதன்முறையாக லிவர்பூல் சொந்த மண்ணில் தோல்விகண்டிருக்கிறது.

இனி யூரோப்பா லீக் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற அட்டலான்டாவின் சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் லிவர்பூல் குறைந்தது நான்கு கோல் வித்தியாசத்தில் வெல்லவேண்டும் அல்லது வெற்றி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்று கோல் வித்தியாசத்தில் வெற்றிகாணவேண்டும். இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்படும்.

ஆன்ஃபீல்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்டலான்டாவின் ஜியன்லுக்கா ஸ்கமக்கா இரண்டு கோல்களைப் போட்டார். மரியோ பசாலிச் அட்டலான்டாவின் மூன்றாவது கோலைப் போட்டார்.

ஆர்சனல், மான்செஸ்டர் சிட்டி ஆகிய குழுக்களுடன் இப்பருவத்தின் பிரிமியர் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் தீவிரமாக இறங்கியுள்ளது லிவர்பூல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்