தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேண்டிடேட்ஸ் சதுரங்கத் தொடர்: பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி வெற்றி

1 mins read
096a3d60-a5f5-4f3f-af45-c1a68d720a6a
இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா (இடது), அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 45வது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். - படம்: இந்திய ஊடகம்

டொரோண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் சதுரங்க தொடர் கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 45வது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். மற்றோர் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 40வது காய் நகர்த்தலின்போது பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவைத் தோற்கடித்தார்.

இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா மோதிய ஆட்டம் 40வது காய் நகர்த்தலின்போது சமநிலையில் முடிவடைந்தது. ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டமும் 41வது காய் நகர்த்தலின் போது சமநிலையில் முடிவடைந்தது.

குறிப்புச் சொற்கள்