தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இபிஎல்: வெற்றியைத் தவறவிட்ட மான்செஸ்டர் யுனைடெட்

1 mins read
e82047e8-b7e8-4643-8bb6-f4239e93a542
65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புரூனோ பெர்னாண்டஸ் கோலாக மாற்றினார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் போர்ன்மோத் அணியும் மோதின.

யுனைடெட் ஆட்டத்தை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே போர்ன்மோத் வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் போர்ன்மோத் முதல் கோலை அடித்தது. பதிலுக்கு யுனைடெட் அணித் தலைவர் புரூனோ பெர்னாண்டஸ் 31வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இருப்பினும் போர்ன்மோத் 36வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து முன்னிலை பெற்றது.

65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புரூனோ பெர்னாண்டஸ் கோலாக மாற்றினார். இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் யுனைடெட் விளையாடிய கடைசி 7 ஆட்டங்களிலும் வெற்றி பெறவில்லை. இது அதன் ரசிகர்களை பெறும் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி 73 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 71 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ஆர்சனல் உள்ளது. மூன்றாவது இடத்தில் 71 புள்ளிகளுடன் லிவர்பூல் உள்ளது.

யுனைடெட் 50 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. 

குறிப்புச் சொற்கள்