ஐபிஎல்: காயம் காரணமாக நாடு திரும்பினார் மார்‌ஷ்

1 mins read
a1db3645-8737-41b7-a8c6-a162c46cfeb0
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விளையாடும் மிட்சல் மார்‌ஷ். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்‌ஷ் தாயகம் திரும்பியுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விளையாடும் மார்‌ஷ், முதல் நான்கு ஆட்டங்களில் விளையாடினார். அதன் பின்னர் நடந்த இரு ஆட்டங்களிலும் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.

மார்‌ஷின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய தலைவலியை தந்துள்ளது.

வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டிசிலும் நடக்கிறது. உலகக் கிண்ணத்தை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணிக்கு மார்‌ஷின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மார்‌‌ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவில்லை. அதனால் அவர் விரைவில் உடல்நலம் தேறி விளையாட தகுதிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி இரண்டு வெற்றிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்