தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்டிக்கு ஏமாற்றம், ஆர்சனல் தடுமாற்றம்

1 mins read
fa01d1b4-466c-442b-9256-395023761b21
ரியாலுக்கு எதிரான ஆட்டத்தில் சிட்டிக்கு கோல் போட்ட கெவின் டிபிரோய்ன. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ்லீக் காற்பந்துப் போட்டியிலிருந்து நடப்பு வெற்றியளரான மான்செஸ்டர் சிட்டி காலிறுதிச் சுற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான சிட்டியை ஸ்பெயினின் ரியால் மட்ரிட், பெனால்டி கோல்கள் மூலம் தோற்கடித்தது.

ரியாலின் பர்னபாவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற காலிறுதிச் சுற்று முதல் ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. சிட்டியின் எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கை 4-4. வெற்றிபெறும் குழுவைத் தீர்மானிக்க ஆட்டம் பெனால்டிகள் வரை சென்றது. பெனால்டிகளில் 4-3 என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ரியால்.

இன்னொரு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் மற்றொரு பிரிமியர் லீக் குழுவான ஆர்சனல், ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்விகண்டது.

ஆர்சனலின் எமிரட்ஸ் விளையாட்டரங்கிள்ல நடைபெற்ற சுற்றின் முதல் ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கை 3-2, வெற்றிபெற்றது பயர்ன்.

குறிப்புச் சொற்கள்