58 வயதில் மீண்டும் களமிறங்கும் ரொமாரியோ

58 வயதில் மீண்டும் களமிறங்கும் ரொமாரியோ

1 mins read
cb18c6ef-acb9-46f6-bd5d-0cc73c40b6d1
பிரேசில் காற்பந்து நட்சத்திரம் ரொமாரியோ. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலிய காற்பந்து சகாப்தம் ரொமாரியோ, தனது 58வது வயதில் மீண்டும் விளையாட்டாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது பிரேசில். அந்த அணியில் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ரொமாரியோ. அதோடு, அவர் ஓர் அரசியல் தலைவரும் ஆவார்.

ரொமாரியோ காற்பந்திலிருந்து ஓய்வுபெற்று 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது தான் தலைவராக இருக்கும் பிரேசிலின் அமெரிக்கா எனும் குழுவுக்கு மீண்டும் விளையாட்டாளராகக் களமிறங்கப்போவதாக ரொமாரியோ அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்