தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோல்வியிலும் நல்லதைப் பார்க்கும் லிவர்பூல் நிர்வாகி

1 mins read
6b1db400-578e-4a28-855b-298d4c285bdb
பெனால்டி வாய்ப்பில் லிவர்பூலின் முதல் கோலைப் போடும் முகமது சாலா. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: யூரோப்பா லீக் காலிறுதிச் சுற்றிலிருந்து வெளியேறியிருப்பது, லிவர்பூல் பிரிமியர் லீக்கில் கவனம் செலுத்த உதவும் என்று அதன் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார்.

காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இத்தாலியின் அட்லாண்டா குழுவிடம் 3-0 எனும் கோல் கணக்கில் தோற்ற லிவர்பூல், வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற இரண்டாம் ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. எனினும், 3-1 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் போட்டியிலிருந்து லிவர்பூல் வெளியேறியது.

“அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், நாங்கள் விரக்தியோ கோபமோ அடையவில்லை. இனி நாங்கள் பிரிமியர் லீக்கில் கவனம் செலுத்தலாம்,” என்று செய்தியாளர்களிடம் கிளோப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்