படகு வலித்தல் வீராங்கனை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

படகு வலித்தல் வீராங்கனை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

1 mins read
9b97f232-d9db-491e-a57a-ca8ee78c45ef
சிங்கப்பூரின் படகு வலித்தல் வீராங்கனை ஸ்டெஃபனி சென். - படம்: ஸ்‌ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் படகு வலித்தல் வீராங்கனை ஸ்டெஃபனி சென் இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 500 மீட்டர் படகு வலித்தல் தகுதிச் சுற்றில் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

சீனா முதலிடத்தையும் உஸ்பெக்கிஸ்தான் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதை சென் நூலிழையில் தவறவிட்டார்.

அந்த ஏமாற்றத்தைக் கண்டு மனந்தளராமல் தொடர்ந்து போராடிய சென் இம்முறை தமது இலக்கை எட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியின் படகு வலித்தல் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து யாரும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்