மீண்டெழுந்த ஆர்சனல்

மீண்டெழுந்த ஆர்சனல்

1 mins read
f715f8c9-aaf5-42c8-bdf3-c632f98b27e4
வுல்சுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் ஆர்சனல் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

வுல்வர்ஹேம்ப்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது ஆர்சனல்.

சனிக்கிழமையன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லியாண்ட்ரோ ட்ரொசார்ட், மார்ட்டின் ஓடகார்ட் ஆகியோர் ஆர்சனலின் கோல்களைப் போட்டனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் ஆர்சனல் வெல்லாதிருந்தது. அதனால் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் அது பெரிய அளவில் பின்தங்கக்கூடும் என்ற அச்சம் நிலவியது.

ஆனால் வுல்சுக்கு எதிராக வெற்றிபெற்றதன் மூலம் மீண்டெழுந்தது ஆர்சனல்.

குறிப்புச் சொற்கள்