தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் எஃப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் சிட்டி

1 mins read
d6dfa5a2-260b-4c0f-927c-3e9ee3f29a06
பெர்னார்டோ சில்வாவின் (சீருடை எண் 20) கோலைக் கொண்டாடும் சிட்டி வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

செல்சிக்கு எதிரான அரையிறுதியாட்டத்தில் சிட்டி, 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. சனிக்கிழமையன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற அந்த ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் வெற்றி கோலைப் போட்டார் சிட்டியின் பெர்னார்டோ சில்வா.

ஆட்டத்தில் பல வேளைகளில் செல்சிதான் மேலும் சிறப்பாக விளையாடியது. ஆனால் அக்குழு பல கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டது சிட்டிக்கு சாதகமாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்