இத்தாலி காற்பந்து லீக் விருதை வென்றது இண்டர் மிலான்

மிலான்: செரிஆ எனும் இத்தாலிய காற்பந்து லீக் விருதை 20வது முறையாக வென்றுள்ளது இண்டர் மிலான் குழு.

தனது பரம வைரியான ஏசி மிலான் குழுவுடன் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இண்டர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் பிடிக்க முடியாத உயரத்தைத் தொட்டது.

இந்தக் காற்பந்துப் பருவத்தில் இண்டர் குழு ஒரு முறைதான் தோல்வி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இண்டர், பட்டியலில் அடுத்த நிலையில் உள்ள ஏசி மிலான் குழுவை விட 17 புள்ளி வித்தியாசத்தில் இருக்கிறது. மேலும் அதற்கு விளையாட இன்னும் ஐந்து ஆட்டங்கள் உள்ளன.

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பிரான்சிஸ்கோ அசெர்பி இண்டரின் முதல் கோலைப் போட்டார். இடைவேளைக்கு இன்னும் நான்கு நிமிடங்கள் இருக்கும்போது மார்கஸ் துராம் இண்டரின் இரண்டாவது கோலை போட்டார். ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ஏசி மிலான் குழுவின் ஃபிகாயோ டோமோரி ஒரு கோல் போட்டு, கோல் எண்ணிக்கையை 2-1 என்று குறைத்தார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதி வரை அக்குழுவால் சமநிலை கோலைப் போட முடியவில்லை.

ஆட்டம் முடியும் வேளையில், இரு குழுக்களின் ஆட்டக்காரர்களுக்குள் கைகலப்பு நிகழ்ந்தது. அதன் விளைவாக இண்டரின் டென்சில் டக்ஃபிரைசுக்கும் ஏசி மிலான் குழுவின் தியோ ஹெர்னான்டசுக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது என்று ராய்ட்டர் செய்தி கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!