லிவர்பூலை கதிகலங்கவைத்த எவர்ட்டன்

1 mins read
53d32341-8e37-4a6c-a069-0257ed17d9ab
லிவர்பூலை வென்ற பிறகு கொண்டாடும் எவர்ட்டன் வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

லிவர்பூல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் லிவர்பூலை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது எவர்ட்டன்.

இதனால் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் லிவர்பூல் பெரும் பின்னடைவை எதிர்நோக்குகிறது.

ஜாரட் பிராந்த்வெய்ட், டொமினிக் கல்வர்ட்-லூவின் ஆகியோர் எவர்ட்டனின் கோல்களைப் போட்டனர்.

இத்தோல்விக்காக லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், அக்குழுவின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் திக்குமுக்காடி ‌ஷெஃபீல்ட் யுனைடெட்டை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் யுனைடெட். லீக் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்படி பெரிதும் தவித்துக்கொண்டிருக்கும் ‌ஷெஃபீல்ட் யுனைடெட், மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு சவால் தந்தது.

இருமுறை பின்னுக்குச் சென்ற மான்செஸ்டர் யுனைடெட் ஒருவழியாக மீண்டுவந்து வென்றது.

ஹேரி மெகுவாயர், புருனோ ஃபெர்னாண்டஸ், ராஸ்முஸ் ஹோய்லண்ட் ஆகியோர் மான்செஸ்டர் யுனைடெட்டின் கோல்களைப் போட்டனர். இரண்டு கோல்களைப் போட்டார் ஃபெர்னாண்டஸ்.

குறிப்புச் சொற்கள்