லிவர்பூலின் புதிய நிர்வாகியாகவுள்ள அர்னி ஸ்லொட்

லிவர்பூலின் புதிய நிர்வாகியாகவுள்ள அர்னி ஸ்லொட்

1 mins read
9fd51bef-11cd-44e7-8fe8-32d872b8e1c6
லிவர்பூலின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்படவுள்ள அர்னி ஸ்லொட். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான லிவர்பூலின் அடுத்த நிர்வாகியாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆர்னி ஸ்லொட் நியமிக்கப்படவுள்ளார்.

இதன் தொடர்பில் ஸ்லொட்டின் தற்போதைய குழுவான நெதர்லாந்தின் ஃபயனூர்டும் லிவர்பூலும் இணக்கம் கண்டுள்ளன. ஸ்லொட், லிவர்பூலில் யர்கன் கிளோப்பின் இடத்தை வகிப்பார்.

தற்போதைய பருவம் முடிவடைந்ததும் லிவர்பூல் நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகப்போவதாக கிளோப், கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிக்கான தேடலில் லிவர்பூல் இறங்கியது.

ஸ்லொட்டைத் தருவிக்க லிவர்பூல், ஃபயனூர்டுக்கு 9.4 மில்லியன் பவுண்ட் (16 மில்லியன் வெள்ளி) வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லொட்டுக்கான சம்பளம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை தொடரும்.

ஃபயனூர்ட், தற்போது 45 வயதாகும் ஸ்லொட்டின் தலைமையில் சென்ற பருவம் நெதர்லாந்து லீக் விருதை வென்றது. அக்குழு, ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக லீக் விருதைக் கைப்பற்றியது.

இப்பருவம் நெதர்லாந்து கிண்ணத்தையும் வென்றுள்ளது ஃபயனூர்ட் லீக்கில் இரண்டாம் இடத்தில் முடிக்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்