லீக் விருதை வெல்லும் வாய்ப்பை நழுவவிடும் லிவர்பூல்

1 mins read
34586816-c5fa-4bb4-ae8b-5c68c4dfce7e
வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தின்போது லிவர்பூல் நட்சத்திரம் முகம்மது சாலா (இடது), நிர்வாகி யர்கன் கிளோப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 4

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லிவர்பூல், வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுடன் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

பிரிமியர் லீக் விருதை வெல்லும் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த லிவர்பூலுக்கு அதற்கான சாத்தியம் இப்போது பெரிய அளவில் குறைந்துவிட்டன. சென்ற வாரம் லீக்கில் பரம வைரியான எவர்ட்டனிடம் லிவர்பூல் தோல்விகண்டது.

முற்பாதியாட்டத்தில் ஜேரட் போவென் வெஸ்ட் ஹேமை முன்னுக்கு அனுப்பினார். பிற்பாதியாட்டத்தில் ஆண்ட்ரூ ராபர்ட்சன் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

65வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேம் கோல் காப்பாளர் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் லிவர்பூல் முன்னுக்குச் சென்றது. பிறகு வெஸ்ட் ஹேமின் மிக்காய்ல் அன்டோனியோ மீண்டும் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் பர்ன்லியுடன் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது மான்செஸ்டர் யுனைடெட்.

ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் யுனைடெட்டை முன்னுக்கு அனுப்பினார் ஆன்டனி. 87வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி பர்ன்லியை சமநிலை காணவைத்தார் ஸெக்கி அம்டூனி.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செல்சியும் ஆஸ்டன் வில்லாவும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் தோற்றுக்கொண்டிருந்த செல்சி விட்டுக்கொடுக்காமல் விளையாடி மீண்டுவந்தது.

குறிப்புச் சொற்கள்