உலகச் சாதனை: லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க 840,000 விண்ணப்பங்கள்

உலகச் சாதனை: லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க 840,000 விண்ணப்பங்கள்

1 mins read
17bb42d6-1bfb-4948-b55f-ac3684baf50e
2024ஆம் ஆண்டுக்கான லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தில் 53,000க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: 2025ஆம் ஆண்டுக்கான லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க 840,318 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அப்போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது உலகச் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 578,374 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

44வது லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயம் கடந்த வாரம் நடைபெற்றது.

அதில் 53,000க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.

2025ஆம் ஆண்டுக்கான போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்